லண்டன்: இந்தியாவில் உள்ள பல வங்கிகளில், ரூ.9000 கோடிக்கு மேலாக கடன் வாங்கிவிட்டு இங்கிலாந்து தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையா செலுத்த வேண்டிய கடன் தொகைக்காக மல்லையாவின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட்டன. அவரது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன், வட்டியுடன் சேர்த்து ரூ.6 ஆயிரத்து 203 கோடி என்று கடன் மீட்பு தீர்ப்பாயம் தீர்ப்பு அளித்துள்ளது.
ஆனால் அதற்கு மாறாக என்னிடம் இருந்து ரூ.14 ஆயிரத்து 131 கோடி வசூலித்து உள்ளனர் என்று விஜய் மல்லையா கூறியிருந்தார். இந்த நிலையில் இந்திய வங்கிகள் பிறப்பித்த திவால் உத்தரவை ரத்து செய்ய கோரி இங்கிலாந்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யுமாறு தனது வக்கீல்களிடம் மல்லையா கூறியுள்ளார் என தகவல்கள் வந்துள்ளன.