பெர்த்: ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நேற்று முன்தினம் நடந்த 3வது ஒரு நாள் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இந்தாண்டின் 4வது சதத்தை விளாசி அபார சாதனை படைத்துள்ளார். ஆஸி சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடி அனைத்திலும் தோற்று ஒயிட் வாஷ் ஆனது.
கடைசியாக நேற்று முன்தினம் பெர்த் நகரில் நடந்த போட்டியில் ஆடிய இந்திய வீராங்கனை மந்தனா, 109 பந்துகளில் 105 ரன் எடுத்தார். இதன் மூலம் மகளிர் கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் 4 சதம் விளாசிய முதல் வீராங்கனை என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 2, நியூசிலாந்து அணிக்கு எதிராக 1 சதங்களை மந்தனா எடுத்துள்ளார்.


