Tuesday, July 16, 2024
Home » விமானப்படையில் அதிகாரி பணியிடங்கள் : பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பு

விமானப்படையில் அதிகாரி பணியிடங்கள் : பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பு

by Porselvi
Published: Last Updated on

இந்திய விமானப்படையில் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க பொது நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு: AFCAT Exam- 2025.
பணி: Commissioned Officer.
மொத்த காலியிடங்கள்: 314.
AFCAT Entry

Branch:
i) Flying: Men (SSC): 18 இடங்கள்
Women (SSC) :11 இடங்கள்.
ii) Ground Duty (Technical):
A. Men
a. AE (L) : 88 இடங்கள்.
b. AE (M) : 36 இடங்கள்.
B. Women
a. AE (L) : 23 இடங்கள்
b. AE (M) : 9 இடங்கள்
iii) Ground Duty (Non-Technical)
A. MEN
a. Weapon Systems (WS) Branch: 14 இடங்கள்.
b. Admin : 43 இடங்கள்
c. LGS : 13 இடங்கள்.
d. Accounts : 10 இடங்கள்.
e. Education : 07 இடங்கள்
f. Met : 08 இடங்கள்.
B. WOMEN
a. Weapon Systems (WS) Branch: 03 இடங்கள்.
b. Admin : 11 இடங்கள்.
c. LGS : 4 இடங்கள்.
d. Accounts : 02 இடங்கள்
e. Edn : 02 இடங்கள்

NCC Special Entry
i) Flying : 10 இடங்கள்.

வயது வரம்பு: 01.07. 2025 தேதியின்படி 20 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். DGCA ஆல் வழங்கப்படும் கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் வைத்திருப்பவர்களுக்கு வயது வரம்பு சலுகை வழங்கப்படும். விமானப்படையின் Ground Duty பணிக்கு 20 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.56,000- 1,77,000.

தகுதி: பிளஸ் 2 வில் கணிதத்தில் குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று ஏதாவதொரு பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவது ஒரு பொறியியல் பாடப்பிரிவில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி: 1.6 கி.மீ., தூரத்தை 10 நிமிடங்களில் ஓடிக் கடக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். 10 புஷ்அப்கள், 3 சின்அப்கள் எடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் விமானப்படையால் நடத்தப்படும் நீச்சல் போட்டி, கயிறு ஏறுதல் ஆகியவற்றில் வெற்றி பெற வேண்டும்.இந்திய விமானப் படையால் ஆன்லைனில் நடத்தப்படும் AFCAT (Air Force Common Admission Test) மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். இத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு 2025ம் ஆண்டு ஜூலை முதல் வாரம் பயிற்சி துவங்கும்.விமானப் படையில் Flying பிரிவில் சேர விரும்புபவர்களுக்கு 62 வாரங்களும், Ground Duty பிரிவுக்கு 52 வாரங்களும் இந்திய விமானப் படையால் பயிற்சி வழங்கப்படும்.

கட்டணம்: ரூ.550/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். NCC Special Entry பிரிவில் சேருபவர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம். விண்ணப்பதாரர்கள் www.afcat.cdac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.06.2024.

You may also like

Leave a Comment

9 + eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi