டெல்லி: இந்திய நிலத்தை சீனா ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் கூறுவது பொய் என ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். லடாக்கில் உள்ள நிலத்தை சீனா ஆக்கிரமித்துவிட்டதாக லடாக் மக்கள் அனைவருக்கும் தெரியும். தனது லடாக் பயணத்தின்போது மக்கள் தன்னிடம் தெரிவித்ததாக ராகுல் காந்தி தகவல் தெரிவித்துள்ளார். அருணாச்சலப்பிரதேசத்தை உள்ளடக்கி சீனா வெளியிட்ட வரைபடம் மிக தீவிரமான பிரச்சனை எனவும் அவர் கூறினார். சீன வரைபடம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இந்திய நிலத்தை சீனா ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் கூறுவது பொய்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
285
previous post