புதுடெல்லி: பால்கன் ராக்கெட் மூலமாக ஆக்சியம்-4 விண்வெளி வீரர்கள் குழு சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்கு திட்டமிட்டு இருந்தது. ஆனால் ராக்கெட்டில் கோளாறு காரணமாக அடுத்தடுத்து 6 முறை ராக்கெட் ஏவுதல் தள்ளிவைக்கப்பட் டது. இந்நிலையில் ஆக்சிம் -4 விண்வெளி பயணத்தை விண்வெளி வீரர்கள் இன்று தொடங்குகிறார்கள். புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸின் பால்கன்-ராக்கெட் மூலமாக இன்று விண்ணில் ஏவப்படுவதாக நாசா அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், இந்திய விண்வெளி வீரர் சுக்லாவுடன், அமெரிக்கா , ஹங்கேரி, போலந்தை சேர்ந்த வீரர்கள் விண்வெளி பயணத்தில் பங்கேற்றுள்ளனர்.
6 முறை ஒத்திவைப்புக்கு பிறகு இந்திய வீரர் சுக்லா இன்று விண்வெளி பயணம்
0