சென்னை: பெண்களால் முன்னேறக் கூடும் – நம்வண்தமிழ் நாடும் எந்நாடும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பதவியேற்ற கன்னியாகுமரியை சேர்ந்த பெண்ணுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியை சேர்ந்த இக்னேஷியஸ் டெலோஸ் ஃப்ளோரா இந்திய ராணுவத்தின் மதிப்பிற்குரிய ராணுவ செவிலியர் சேவையில் மேஜர் ஜெனரல் என்ற மதிப்புமிக்க பதவியை அடைந்துள்ளார். அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக துருவா கமாண்ட் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் COVID-19 இன் போது நிலைமையைக் கையாள்வது உட்பட அவரது 38 ஆண்டுகால நர்சிங் வாழ்க்கையில் தளராத ஆர்வத்துடன் தேசத்திற்கு சேவை செய்யள்ளார் என தெரிவித்துள்ளனர்.
இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பதவியேற்றுள்ள கன்னியாகுமரியை சேர்ந்த இக்னேஷியஸ் டெலோஸ் ஃப்ளோரா-வுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பெண்களால் முன்னேறக் கூடும் – நம்
வண்தமிழ் நாடும் எந்நாடும்!Congratulations to Major General Ignatius Delos Flora on her exceptional achievement! Becoming the first woman from Kanyakumari, Tamil Nadu, to reach the prestigious rank of Major General is an incredible milestone.… https://t.co/l442ckD247
— M.K.Stalin (@mkstalin) August 2, 2023
அந்த பதிவில்:
பெண்களால் முன்னேறக் கூடும் – நம் வண்தமிழ் நாடும் எந்நாடும்!
மேஜர் ஜெனரல் இக்னேஷியஸ் டெலோஸ் ஃப்ளோராவின் சிறப்பான சாதனைக்கு வாழ்த்துகள்! தமிழ்நாட்டின் கன்னியாகுமரியைச் சேர்ந்த முதல் பெண்மணி மேஜர் ஜெனரல் பதவியை எட்டியது நம்பமுடியாத மைல்கல். அவரது அற்புதமான தொழில், சேவை மற்றும் ஆர்வத்திற்கு வணக்கங்கள் என பதிவிட்டுள்ளார்.