பயிற்சி: 10+2 Technical Entry Scheme-2025 (54th Course):
வயது வரம்பு: 16½ முதல் 19½ வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 02.07.2006க்கும் 01.07.2009க்கும் இடைப்பட்ட தேதியில் (இரண்டு தேதிகள் உள்பட) பிறந்திருக்க வேண்டும்.
தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்கள் அடங்கிய பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.56,100- ரூ.1,77,500.
உடற்திறன் தகுதி: 15 நிமிடங்களுக்குள் 2.4 கி.மீ., தூரம் ஓடிக் கடக்க வேண்டும். புஷ் அப்கள்-20, சிட் அப்கள்-20, சின் அப்கள்-8 எடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். செங்குத்தான கயிற்றில் 3.4 மீட்டர் தூரம் ஏற வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் பிளஸ் 2 மற்றும் ஜேஇஇ மெயின் தேர்வு-2025ல் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வானது ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இரு கட்டங்களாக நடைபெறும்.ஸ்டேஜ்-1 தேர்வில் உளவியல் மற்றும் குழு விவாதம் நடைபெறும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ஸ்டேஜ்-2ல் உடற்தகுதித் தேர்வு, மருத்துவத் தகுதித் தேர்வு நடைபெறும்.
உத்தரபிரதேசம், அலகாபாத், மத்திய பிரதேசம், போபால், கர்நாடகா, போபால், பஞ்சாப், கபூர்தாலா ஆகிய மையங்களில் எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வு நடைபெறும். தேதி ஆன்லைனில் வெளியிடப்படும்.
பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 5 ஆண்டு பயிற்சி வழங்கப்படும். இதில் அடிப்படை ராணுவ பயிற்சி ஒரு வருடமும், ராணுவ தொழில்நுட்ப பயிற்சி 3 வருடங்களும் வழங்கப்படும். ராணுவ அதிகாரிக்கான பயிற்சி ஒரு வருடம் வழங்கப்படும். 5 வருட பயிற்சி முடிந்த பின் ராணுவத்தில் லெப்டினென்ட் ஆக பணியமர்த்தப்படுவர். ஜனவரி 2026ல் பயிற்சி தொடங்கும்.
விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை (12.06.2025)