புதுடெல்லி: இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சுனில் கூறுகையில்,‘‘அமெரிக்க நிறுவனத்தினால் எப்404 என்ஜின்களை சரியான நேரத்தில் வழங்க இயலவில்லை. இதன் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் 12 என்ஜின்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது இந்திய விமானப்படைக்கு தேஜஸ் விமானங்களை வழங்குவதற்கு உதவும். நாங்கள் விமானத்தை உருவாக்கி உள்ளோம்.
இன்று வரை எங்களிடம் 6 விமானங்கள் உள்ளன. ஆனால் ஏஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடம் இருந்து என்ஜின் விநியோகம் நடைபெறவில்லை. அவர்கள் 2023ம் ஆண்டு என்ஜின்களை வழங்க இருந்தனர். ஆனால் தற்போது வரை எங்களிடம் ஒரே ஒரு என்ஜின் மட்டுமே உள்ளது. மேலும் மார்ச் 2026ம் ஆண்டுக்குள் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் 12 ஜெட் இன்ஜின்களை பெற உள்ளது. எங்களிடம் 6 விமானங்கள் தயாராக உள்ளன. இந்த நிதியாண்டில் வழங்கக்கூடிய நிலையில் இருக்கிறோம்” என்றார்.