புதுடெல்லி: இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதற்கான சூழ்நிலையை ஆம் ஆத்மி உருவாக்குகிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் முன்னாள் எம்பியான சந்தீப் தீட்சித் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, பீகார் பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடுவது குறித்து அவரிடம் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த சந்தீப்தீட்சித்,‘‘ இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கான சூழ்நிலையை அந்த கட்சி உருவாக்கி வருகிறது. இதில் என்ன இருக்கிறது. ஒன்றிய அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் பேசும்போது ஆம் ஆத்மி ஓட போகிறது என தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி செய்ய உள்ளதை அமித் ஷா வெளிப்படையாக தெரிவித்தார். அவர்கள் இதை செய்வார்கள்’’ என்றார்.