சென்னை: இந்தியாவில் ஜூலை மாதத்தில் வாகன விற்பனை அதிகரித்துள்ளது என வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. இருசக்கர வாகன விற்பனை 17%-மும், 3 சக்கர வாகன விற்பனை 13%மும், பயணிகள் வாகன விற்பனை 10%மும் உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் வணிக பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை 6%-மும் அதிகரித்துள்ளது.