இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா யு-19 அணி, புதுச்சேரியில் 3 ஒருநாள் போட்டிகளிலும் (செப். 21, 23, 26), சென்னையில் இரண்டு 4 நாள் போட்டிகளிலும் ( தொடக்கம்: செப். 30, அக்.7) விளையாட உள்ளது. இந்த போட்டிகளுக்கான இந்தியா யு-19 அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்திய அணி முன்னாள் கேப்டன் மற்றும் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிடின் மகன் சமித் டிராவிட் (18 வயது, ஆல் ரவுண்டர்) தேர்வு செய்யப்பட்டுள்ளார். 50 ஓவர் போட்டிகளுக்கான இந்தியா யு-19 அணியின் கேப்டனாக முகமது அமான் (உ.பி.), 4 நாள் போட்டிகளுக்கான அணியின் கேப்டனாக சோஹம் பட்வர்தன் (ம.பி.) நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக வீரர்கள் ஒருவர் கூட தேர்வு செய்யப்படவில்லை.