கர்நாடகா: இந்தியாவில் முதல்முறையாக இரு மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஒசூர் – கர்நாடகாவின் பொம்மசந்திரா இடையே பெருந்திரள் போக்குவரத்து முறையை அறிமுகம் செய்ய ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. பெருந்திரள் போக்குவரத்து முறையை அறிமுகம் செய்வதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயார் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகளை தொடங்கியுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்திருக்கிறது. பொம்மசந்திரா மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ஒசூர் 20.5 கி.மீ. தொலைவில் உள்ளது.