கொழும்பு: இந்திய அணியுடன் டி20 தொடரில் மோதவுள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சென்றுள்ள இந்திய அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. டி20 போட்டிகள் ஜூலை 27, 28, 30ல் நடைபெற உள்ளன. இந்த நிலையில், டி20 தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சரித் அசலங்கா தலைமையிலான அணியில் மொத்தம் 16 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இலங்கை (டி20): சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிசங்கா, குசால் பெரேரா, அவிஷ்கா பெர்னாண்டோ, குசால் மெண்டிஸ், தசுன் ஷனகா, வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா, சமிந்து விக்ரமசிங்கே, மதீஷா பதிராணா, நுவன் துஷாரா, துனித் வெல்லாலகே, துஷ்மந்த சமீரா, பினுரா பெர்னாண்டோ.