வார்சா: எந்த நாட்டில் பிரச்னை வந்தாலும் இந்தியாதான் முதலில் உதவிக்கரம் நீட்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்து போலந்து நாட்டு தலைநகர் வார்சாவுக்கு பிரதமர் மோடி நேற்று காலை புறப்பட்டுச் சென்றார். வார்சா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்குப் பிறகு 45 ஆண்டுகள் கழித்து போலந்து செல்லும் முதல் பிரதமர் மோடி ஆவார். வார்சாவில் அவர் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், அதிபர் ஆண்ட்ரீஸ் டூடா ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவு மற்றும் வர்த்தகத்தை வலுப்படுத்துவது குறித்து பேச உள்ளார்.
மேலும், போலந்து தொழில் நிறுவன தலைவர்களை சந்தித்து இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்த மோடி, அங்கு வாழும் இந்திய வம்சாவளிகளையும் சந்தித்து பேசினார். அப்போது; தனக்கு கிடைத்த அனபான வரவேற்பிறகு போலந்து நாட்டு மக்களுககு நன்றி. அனைவருடனும் இணையும் இந்தியா அனைவரின் வளர்ச்சியையும் விரும்புகிறது. எந்த நாட்டில் பிரச்னை வந்தாலும் இந்தியாதான் முதலில் உதவிக்கரம் நீட்டும். உக்ரைன் போரை பற்றி குறி்பபிடுகையில் இப்பகுதியில் நிரந்தர அமைதி நிலவுவதையே இந்தியா விரும்புகிறது. இந்த நேரத்தில் போர் தேவையில்லாதது.
உக்ரைனில் சிக்கி இருந்த இந்திய மாணவர்களை மீட்க போலாந்து அரசு உதவி செய்தது; விசா விதிமுறைகளை இந்திய மாணவர்களுக்காக தளர்த்திக்கொண்டது. ஏ.ஐ.,தொழில் நுட்பத்தில் இந்தியா 30 முதல் 35 சதவீதம் வளர்ச்சியை கொண்டுள்ளது. ஒரே ராக்கெட்டில் 100 செயற்கை கோளை அனுப்ப தயாராகி வருகிறது. இந்தியா விண்வெளியில் சொந்தமாக ஆய்வுமையம் அமைக்க முயற்சித்து வருகிறது என்று கூறினார்.