டெல்லி: இந்திய பாரா பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத்தை 18 மாதங்களுக்கு இடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊக்கமருந்து விதிமுறைகளை மீறிய புகாரில் பாரா ஒலிம்பிக் சாம்பியன் பிரமோத் பகத் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பணியிடை நீக்கம் காரணமாக பாரா ஒலிம்பிக் தொடரில் பிரமோத் பகத் பங்கேற்க முடியாது. பிரமோத் பகத்தின் மேல்முறையீட்டு மனுவை சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் நிராகரித்தது.