டெல்லி: இந்தியாவில் கடந்த அக்டோபரில் பயணிகள் வாகன விற்பனை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாண்டு அக்டோபரில் 3,89,714 வாகனங்கள் விற்ற நிலையில் 2022 அக்டோபரில் 3,36,330 வாகனங்கள் விற்றன. 3 சக்கர வாகனங்களின் விற்பனையும் இந்த ஆண்டு அக்டோபரில் 42 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த மாதம் 76,940 மூன்று சக்கர வாகனங்கள் விற்பனையான நிலையில் 2022 அக்டோபரில் 54,154 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது.
இருசக்கர வாகன விற்பனை 20.1% அதிகரிப்பு:
இந்தியாவில் இருசக்கர வாகனங்கள் விற்பனை கடந்த அக்டோபரில் 20.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் இவ்வாண்டு அக்டோபரில் 18,95,799 இருசக்கர வாகனங்கள் விற்பனையாகின. கடந்த ஆண்டு அக்டோபரில் 15,78,383 இருசக்கர வாகனங்கள் விற்பனையாகின.