திருவனந்தபுரம்: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில், இந்தியா – நெதர்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியுடன் இந்தியா மோதுவதாக இருந்த முதல் பயிற்சி ஆட்டம், கனமழை காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்டது. நெதர்லாந்து – ஆஸ்திரேலியா மோதிய பயிற்சி ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் தங்களின் 2வது பயிற்சி ஆட்டத்தில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டி திருவனந்தபுரம், கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு தொடங்குகிறது.
* இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஆர்.அஷ்வின், ஷர்துல் தாகூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்.
* நெதர்லாந்து: ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), வெஸ்லி பரேஸி, மேக்ஸ் ஓதவ்த், விக்ரம்ஜித் சிங், கோலின் ஆக்கர்மேன், பாஸ் டி லீட், சிப்ரண்ட் எங்கல்பிரெக்ட், தேஜா நிடமனுரு, சாகிப் ஸுல்பிகார், ரோலப் வாண்டெர்மெர்வ், ஆர்யன் தத், ரயன் கிளெய்ன், ஷரிப் அகமது, லோகன் வான் பீக், பால் வான் மீகரன்.