சென்னை : முன்கூட்டியே நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படலாம் என்பதால், செப்டம்பர் 30ம் தேதிக்குள் தொகுதிப் பங்கீட்டை முடிக்க வேண்டும் என்று I.N.D.I.A கூட்டணி கட்சி தலைவர்கள் மம்தா பானர்ஜி மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் பொதுவான செயல் திட்டம் அல்லது தேர்தல் அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.