டெல்லி: இந்தியா – மலேசியா அரசுகளிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. மலேசிய பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்கப்படும். திருவள்ளுவர் இருக்கை அமைப்பது குறித்து இரு நாட்டு அரசுகளும் முடிவு எடுக்கபப்ட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். அனைத்து துறைகளிலும் இந்திய நிறுவனங்களுடன் மலேசிய நிறுவனங்கள் இணைந்து செயல்படும் என மலேசிய பிரதமர் தெரிவித்தார். உணவு பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்பட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.