முன்னாள் வீரர்கள் விளையாடும் இன்டர்நேஷ்னல் டி20 கிரிக்கெட் போட்டியில் 6 நாடுகள் களம் கண்டுள்ளன. ஒவ்வொரு நாடும் தலா 5 லீக் ஆட்டங்களில் விளையாட உள்ளது. முதல் 3 ஆட்டங்களில் இலங்கை, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகளை சாய்த்து ஹாட்ரிக் வெற்றியை இந்தியா பெற்றது.
4வது ஆட்டத்தில் ஷேன் வாட்சன் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியிடம் இந்தியா மோதியது. முதலில் ஆடிய ஆஸியின் ஷான் மார்ஷ் 22, வாட்சன், பென் டங்க் ஆகியோர் ஆட்டமிழக்காமல் 110, 132 ரன் எடுத்தனர். ஆஸி ஒரு விக்கெட் இழப்புக்கு 269 ரன் குவித்தது. அடுத்து விளையாடிய 20 ஓவரில் 174 ரன் மட்டுமே எடுத்து 95ரன்னில் தோற்றது.