ஜெய்பூர்: இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ரூ.15 கோடி மதிப்புள்ள 3 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தியாவின் மேற்குபகுதியில் ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய நாடுகளின் எல்லை வழியே செல்லும் சர்வதேச எல்லையின் 2,289 கிலோமீட்டர் தூரத்தை எல்லை பாதுகாப்பு படையினர் கண்காணித்து, காத்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 19ம் தேதி இரவு ராஜஸ்தானின் 44 பிஎஸ் கிராமத்தில் பஞ்சாப் காவல்துறையினர் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் இணைந்து கூட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆளில்லா விமானம் மூலம் கடத்தி வரப்பட்டு வயல் வெளியில் வீசப்பட்டிருந்த 3 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப்பொருளை பஞ்சாப் காவல்துறை மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.15 கோடி. போதைப்பொருளை கடத்தி வந்தவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.