புதுடெல்லி: இந்தியாவில் தேடப்பட்ட குற்றவாளி அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டிருக்கிறார். இந்தியாவில் பல்வேறு வங்கி மோசடி குற்றங்களுக்காக தேடப்படும் நபராக இருந்த அங்கத் சிங் சந்தோக், கடந்த 2016ஆம் ஆண்டு குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார். இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்தியாவில் இருந்து தப்பிச்சென்று கலிபோர்னியாவில் வசித்து வந்த அங்கத்சிங், அங்கும் தனது மோசடியை காட்டினார். கடந்த 2022ல் கைதான அங்கத் சிங் மீதான வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. அமெரிக்க சிறையில் அங்கத் சிங் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரை இந்தியாவுக்கு அழைத்து வர சிபிஐ நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக தற்போது அங்கத் சிங் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு நேற்று இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்தியாவில் இருந்து தப்பி ஓடிய வங்கி மோசடி குற்றவாளி நாடு கடத்தப்பட்டார்: அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு கொண்டு வந்தது சிபிஐ
0
previous post