Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியா வழியாக வங்கதேசத்திற்கு நேபாளம் மின் சப்ளை

காத்மாண்டு: வங்க தேசத்தில் மின்சாரத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நேபாளத்தில் இருந்து மின்சாரத்தை வாங்குவதற்கு அந்த நாடு முடிவு செய்தது. இதற்காக நேபாளம், இந்தியா மற்றும் வங்கதேசம் மற்றும் 3 நாடுகள் முத்தரப்பு ஒப்பந்தத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் கையெழுத்திட்டன. நேபாளத்தில் உற்பத்தியான மின்சாரத்தை இந்தியா வழியாக தான் அனுப்ப முடியும் என்பதால் இந்தியாவும் இதில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த நிலையில் வங்கதேசத்திற்கான மின் விநியோகம் நேற்று முன்தினம் இரவு முதல் முறைப்படி தொடங்கியது. இது இந்தியாவில் உள்ள முசாபர்பூர்-பஹரம்பூர்-பெராமாரா 400 கேவி மின்சார லைன் வழியாக அனுப்பப்படுகிறது. ஒப்பந்தத்தின்படி ஜூன் 15ம் தேதியில் இருந்து வரும் நவம்பர் 15ம் வரை வங்கதேசத்திற்கு 40 மெகாவாட் மின்சாரத்தை நேபாளம் விநியோகிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.