டெல்லி: சவுதி அரேபிய இளவரசர் முகமது சல்மானுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் வழியாக ஐரோப்பா வரை சரக்கு போக்குவரத்து வழித்தடம் குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்தியா – சவுதி வர்த்தகத்தை அதிகரிப்பது, முதலீடுகளை பெருக்குவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஜி20 மாநாட்டிற்காக இந்தியா வந்த சவுதி அரேபிய இளவரசர் முகமது சல்மானுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.