சென்னை: புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் வெளியிட்ட வாழ்த்து செய்தி: கடந்த 2014, 2019ம் ஆண்டுகளில் பிரதமராக மோடி பொறுப்பேற்று, கடந்த 10 ஆண்டுகளில் நாட்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்திய பொருளாதாரமும் வலுவாக உள்ளது. பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் அதிகரித்து உள்ளது. மேக்இன் இந்தியா திட்டத்தின்கீழ், உள்நாட்டிலேயே ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இதைத் தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பொறுப்பேற்ற மோடி, அனைத்து நாடுகளிலும் உணர்வுபூர்வ நட்பு பாராட்டி வருகிறார்.இதன் தொடர்ச்சியாக, அண்மையில் நடந்த ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில், எந்தவொரு நாடும் பாகிஸ்தானை ஆதரிக்காததால் தனிமைப்படுத்தப்பட்டது. இது, பிரதமர் மோடியின் ராஜதந்திரத்துக்கு மிகப்பெரிய வெற்றியாகும். பயங்கரவாதத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட மரண அடியாகும்.
இனிவரும் 4 ஆண்டு ஆட்சிக் காலத்தில், மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து பிரதமர் மோடி அரசால் செயல்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இந்திய தேசம் வலுவான, வளமான நாடாக என்றும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்.