துஷான்பே: தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் பனிப்பாறைகள் பாதுகாப்பு குறித்த மூன்று நாள் சர்வதேச மாநாட்டில் பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: சிந்து நதி நீர் பங்கீட்டை நிர்வகிக்கும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் இந்தியாவின் ஒருதலைப்பட்சமான மற்றும் சட்டவிரோதமான முடிவு மிகவும் வருந்தத்தக்கது. தண்ணீரை ஆயுதமாக்குதலை காண்கிறோம். லட்சக்கணக்கான மக்கள் குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக பணயக்கைதிகளாக வைக்கப்படக்கூடாது, பாகிஸ்தான் இதை அனுமதிக்காது. சிவப்பு கோட்டை கடக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றார்.
இந்தியா, பாக். மோதலில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ஆயுதமாக மாற்றுவதா?: பாக். பிரதமர் கேள்வி
0