Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் உதயகிரி போர்க்கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு..!!

டெல்லி: இந்தியாவின் கடற்படை வலிமையை அதிகரிக்கும் விதமாக அதி நவீன போர் கப்பல்கள் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளன. புரஜெக்ட் 17A திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது போர் கப்பலான ஐஎன்எஸ் உதயகிரி இந்திய கடற்படையிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. மறந்திருந்த தாக்கும் சின்ஹா போர்க்கப்பல் 37 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்றும், அனைத்து வகையான கடல் சார் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டது என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் மீதமுள்ள 5 கப்பல்கள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஒப்படைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மறுபுறம் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் தமால் ஏவுகணை போர்க்கப்பல் ரஷ்யாவில் உள்ள யாந்தர் கப்பல் காட்டும் தளத்தில் இந்திய கடற்படையுடன் இணைக்கப்பட்டது. இது இந்திய கடற்படையில் சேர்க்கப்படும் கடைசி வெளிநாட்டு தயாரிப்பு போர்க்கப்பல் என்றும் கூறப்பட்டுள்ளது.