வேலூர்: 150 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலைக்கனல் தெறித்த ஊர்தான் இந்த வேலூர். கலைஞர் நூற்றாண்டில் வேலூரில் முப்பெரும் விழாவை நடத்துவது மிக மிக பொருத்தமானது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். அண்ணா தொடங்கிய திமுக 75 ஆண்டுகளை கடந்தும் செழிப்புடன் இருக்க காரணம் தொண்டர்கள்தான். வேலூரில் சிப்பாய் கலகத்தின் நினைவுத்தூணை கலைஞர் நிறுவினார். திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.