டெல்லி: எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கார் உற்பத்தியை தொடங்க ஆர்வம் காட்டவில்லை என ஒன்றிய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். உற்பத்திக்கு பதில் இந்தியாவில் 2 ஷோ ரூம்களை மட்டுமே தொடங்க டெஸ்லா விரும்புகிறது என டெல்லியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தியை ஊக்குவிப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்ட பின் ஒன்றிய அமைச்சர் குமாரசாமி பேட்டியளித்தார். வரி தவிர்ப்புக்காக இந்தியாவில் ஆலை அமைப்பது நியாயமற்றது என ஏற்கனவே டிரம்ப் கூறியிருந்தார்.