டெல்லி: 42 ஆண்டுக்கு பின் இந்தியாவில் விமானப் போக்குவரத்து பற்றிய IATA வருடாந்திர 3 நாள் மாநாடு நடைபெறுகிறது. ஜூன் 3 வரை நடக்கும் மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து 350க்கு மேற்பட்ட விமான நிறுவனங்கள் பங்கேற்றுள்ளனர். விமான போக்குவரத்து நிறுவன தலைமை செயல் அதிகாரிகள் உட்பட 170க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். விமானப் போக்குவரத்து முன்னேற்றங்கள், எதிர்கொள்ளும் சவால் உள்ளிட்ட பிரச்சனைகள் விவாதிக்கப்படும்.