சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வேலூர் காவல் ஆய்வாளர் புனிதா, சென்னை காவல் ஆய்வாளர் வினோத்குமார் உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்படும். சென்னை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை காவல் துறை தலைவர் அன்பு உள்ளிட்டோருக்கு விருது அறிவித்துள்ளது. விருது பெறும் ஒவ்வொருவருக்கும் தலா 8 கிராம் தங்கப்பதக்கம், ரூ 25,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும். சுதந்திர தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் விருது வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
previous post