சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்றி கொண்டாடுவதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்பேரில் வழக்கத்திற்கு மாறாக மாநிலங்களில் தேசியக்கொடி அணிவகுப்பு நடத்தி சொந்தம் கொண்டாட முற்படுவதற்கு பாஜவுக்கு எந்த உரிமையும் இல்லை.
எனவே, வருகிற 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 15ம் தேதி வரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தேசியக் கொடி பொருத்தப்பட்ட நூற்றுக்கணக்கான இருசக்கர வாகன அணிவகுப்பை முக்கிய வீதிகளில் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.