ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் 2019ல் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதன் பின்னர் 4 ஆண்டுகளாக அங்கு தீவிரவாத செயல்கள் அதிகரித்துள்ளதாக தரவு விவரங்கள் தெரிவிக்கின்றன. 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதியில் இருந்து ஜூன் 16ம் தேதி வரை 231 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் 27 முதல் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி வரையிலான கைது நடவடிக்கையை காட்டிலும் 71 சதவீதம் அதிகமாகும். 8 கையெறி குண்டுகள் மற்றும் 13 வெடிகுண்டு சம்பவங்கள் பதிவாகி உள்ளது. இதேபோல் குண்டுவெடிப்பில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும் 73 சதவீதம் உயர்ந்துள்ளது.