Monday, July 22, 2024
Home » புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: சென்னை குடிநீர் ஏரிகளில் 39.82% நீர் இருப்பு

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: சென்னை குடிநீர் ஏரிகளில் 39.82% நீர் இருப்பு

by Neethimaan

சென்னை: புழல் ஏரிக்கு நேற்று 61 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 146 கன அடியாக அதிகரித்துள்ளது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 2,720 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோழவரம் ஏரிக்கு வினாடிக்கு 3 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 129 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கனஅடி உள்ள கண்ணன்கோட்டை ஏரியில் நீர்இருப்பு 299 மில்லியன் கனஅடியாக உள்ளது.

சென்னை குடிநீர் ஏரிகளில் 39.82% நீர் இருப்பு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 39.82% நீர் இருப்பு உள்ளது. 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில் தற்போது 4.682 டிஎம்சி நீர்இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் 40.27%, புழல் 82.42%, – 2.04%, சோழவரம் 11.93%, கண்ணன்கோட்டை 59.8% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 150 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக 109 கனஅடி வெளியேற்றப்படுகிறது

You may also like

Leave a Comment

19 − four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi