மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 3332 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 4,165 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 250 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட, நீர்வரத்து அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 61.08 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 61.51 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 25.82 டிஎம்சியாக உள்ளது.