காஞ்சிபுரம்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 300 கனஅடியில் இருந்து 577 கனஅடியாக அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 109 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 14.50 அடியாக உள்ளது; 1441 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி சுற்றுவட்டார பகுதியில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு
previous post