புதுடெல்லி: ஒன்றிய அரசில் சில பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு மாற்றுப்பணி படி (டெபுடேஷன் அலவன்ஸ்) உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், ‘ஒன்றிய பணியாளர் திட்டத்தின் கீழ் ஒன்றிய செயலகங்களில் செயலாளர், துணை செயலாளர் மற்றும் இயக்குநராக நியமிக்கப்படும் அகில இந்திய சேவைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குரூப் ஏ சேவைகளின் அதிகாரிகளுக்கு மாற்றுப்பணிக்கான திருத்தப்பட்ட படி வழங்கப்படும். தற்போது அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதம் என்ற வீதத்தில் மாதத்திற்கு அதிகபட்சம் ரூ.9,000 வரை வழங்கப்படுகிறது.
பல்வேறு அமைச்சகங்கள், துறைகளிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு, உரிய ஆலோசனைக்குப் பிறகு, ஒவ்வொரு முறையும் அகவிலைப்படி 50 சதவீதம் அதிகரிக்கும் போது, மாற்றுப்பணி படி உச்சவரம்பு 25 சதவீதம் அதிகரிக்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது.