புதுடெல்லி: விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் தொற்று நோய்கள் அதிகரித்திருப்பது கவலை அளிப்பதாக ஒன்றிய சுகாதாரத்துறை செயலர் தெரிவித்தார். விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் தொற்று நோய்கள் கண்காணிப்பு மற்றும் மனிதனுக்கும் விலங்கிற்கும் இடையிலான தொடர்பு மற்றும் பாம்புக்கடி விஷத்தைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தேசிய செயல்திட்டத்தின் ஒப்புதலுக்கான தேசிய மாநாடு டெல்லியில் உள்ள தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தில் நடந்தது.
இதில் பங்கேற்று பேசிய ஒன்றிய சுகாதாரத்துறை செயலர் சுதன்ஷ் பண்ட், “விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் தொற்று நோய் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. இதனால் மனிதனும் விலங்குகளும் கூட பாதிக்கப்படுகின்றன. கடந்த 30 ஆண்டுகளாக மனிதனை பாதிக்கும் புதிதாக உருவான தொற்று நோய்களில் 75% விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவுவதாக உள்ளது,” என்று தெரிவித்தார்.