டெல்லி : 2022-23 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளவர்கள் நேற்று மாலை வரை சுமார் 6 கோடி பேர் என்று ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 31ம் தேதி வரை தாக்கல் செய்யப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கையை விட இது அதிகம் என்று கூறப்படுகிறது.