மதுரை: கரூரில் வருமான வரி அதிகாரிகளை தாக்கிய 19 பேருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை உயர்நீதிமன்ற மதுரைகிளை ரத்து செய்து உத்தரவிட்டது. ஜாமீன் ரத்து செய்யபட்ட 19 பேரும் 3 நாட்களில் கரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடய உத்தரவிடபட்டுள்ளது. கரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து உரிய உத்தரவு பிறபிக்கலாம் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.