டெல்லி: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான போர்டல் திறக்கப்படாததால் லட்சக்கணக்கானோர் தவித்து வருகின்றனர். வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் பல மாற்றங்கள் செய்யப்படுவதால் போர்டல் திறப்பதில் சிக்கல் என தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்.16ம் தேதியே போர்டல் திறக்கப்பட்டதால் உரிய நேரத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடிந்தது. இவ்வாண்டு மே 21 தேதி ஆன நிலையிலும் இன்னும் போர்டல் திறக்கப்படாததால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் அவதியடைந்துள்ளனர். வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாததால் வெளிநாடு செல்வோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தவித்து வருகின்றனர்.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான போர்டல் திறக்கப்படாததால் லட்சக்கணக்கானோர் தவிப்பு
0