திருப்பத்தூர்: தகாத உறவு தகராறில் தொழிலாளி மண்டை உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பெண்ணை தேடி வருகின்றனர். திருப்பத்தூர் அடுத்த குரும்பகேரி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (40), தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி தமிழரசி (35). சிவக்குமாரும், தமிழரசியும் உறவினர்கள். இதனால் இருவரும் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இதில் அவர்களிடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிவக்குமார், தமிழரசியிடம் அடிக்கடி போன் செய்து பேசுவாராம். இதேபோல் நேற்றுமுன்தினம் சிவக்குமார் போன் செய்துள்ளார். ஆனால் தமிழரசி போனை எடுக்கவில்லையாம். பலமுறை முயன்றும் பேச முடியாததால் ஆத்திரமடைந்த சிவக்குமார் அன்றிரவு தமிழரசியின் வீட்டுக்கு சென்று கேட்டுள்ளார். இதனால் அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அங்கு வந்த தமிழரசியின் கணவர் விஜயகுமார் மற்றும் மைத்துனர் பெருமாள் ஆகியோர் சிவக்குமாரை கட்டை மற்றும் கைகளால் சரமாரி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சிவக்குமாரின் மண்டை உடைந்தது. படுகாயமடைந்த அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசில் சிவக்குமார் நேற்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பெருமாள், விஜயகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள தமிழரசியை தேடிவருகின்றனர்.