மதுரை: மதுரையில் கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து விபத்துகளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து வந்த லாரிகள் மோதியதில் மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் 5 பேர் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.