சென்னை : தமிழ்நாட்டில் முதற்கட்டமாக இன்னும் 2 மாதங்களில் 1,600 புதிய பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்று அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். 1,600 புதிய பேருந்துகள் இயக்கம் தொடங்கியவுடன் பழைய பேருந்துகள் படிப்படியாக கழிக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். விரைவு போக்குவரத்துக்கழகத்துக்காக 655 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.