Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

திருப்பூரில் அரசு பேருந்து ஓட்டுநர் செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கிய வீடியோ இணையத்தில் வைரல்

திருப்பூர்: திருப்பூரில் அரசு பேருந்து ஓட்டுநர் செல்போன் பேசியபடி பேருந்து இயக்கிய வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்பூர் குன்னத்தூரில் இருந்து பெருமாநல்லூர், புதிய பேருந்து நிலையம் வழியாக திருப்பூர்பழைய பேருந்து நிலையம் வரும் 45D என்ற அரசுபேருந்தில் அதன் ஓட்டுநர் செல்போன் பேசிய படியும்,ஆபத்தான முறையில் இரு கைகளையும் விட்டு தனது செல்போனுக்கு ஹெட் செட் குத்தியுள்ளார்.

இதை அந்த பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார் தற்பொழுது அந்த வீடியோசமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.மேலும் பொதுமக்கள் அச்சமடையும் வகையில் பேருந்தை ஓட்டிய ஓட்டுனர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.