சென்னை: தமிழ்நாட்டில் ஐபோன் 16 புரோ செல்போன் உற்பத்தியை ஆப்பிள் நிறுவனம் விரைவில் தொடங்குகிறது. பாஸ்கான் நிறுவனம் ஐபோன் 16 புரோ, ஐபோன் 16 புரோ மேக்ஸ் போன்களை ஓரிரு வாரத்தில் உற்பத்தி செய்ய உள்ளது. ஐபோன் புரோ வகை செல்போன்களை ஆப்பிள் நிறுவனம் இதுவரை சீனாவில் மட்டுமே உற்பத்தி செய்து வந்தது. சீனாவுக்கு வெளியே ஐபோன் புரோ வகை செல்போன்களை ஆப்பிள் நிறுவனம் உற்பத்தி செய்வது இதுவே முதல்முறை ஆகும்.