பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே காந்திபுரத்தைச் சேர்ந்தவர் முத்தையன் (22). இவரது மனைவி சினேகா (21). இவர்களது மகள் பூவரசி (4). சினேகாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சரத்குமார் (21) என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது. இதனால் தம்பதியர் பிரிந்து வாழ்ந்துள்ளனர்.
2 தினங்களுக்கு முன்பு சினேகா மகளுடன் பரமத்திவேலூரை அடுத்த சேலூர் செல்லப்பம்பாளையத்தில் உள்ள உறவினரான கோகிலா (40) வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று மதியம் 2 மணியளவில் மகள் பூவரசியை, அருகில் உள்ள விவசாய கிணற்றில் தூக்கி வீசி உள்ளார். இதை பார்த்தவர்கள் காப்பாற்ற முயன்றனர். அதற்குள் சிறுமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாள்.