சென்னை: சிறையில் கைதியிடம் பணம் கேட்டதுடன் பொய் வழக்கு தொடர்வதாக மிரட்டல் விடுத்த புகாரில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. உதவி ஜெயிலர், சிறை வார்டன்களுக்கு எதிரான புகார் குறித்து விசாரிக்க, வேலூர் சிறை டி.ஐ.ஜி. விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழிப்பறி வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் ராதாகிருஷ்ணன் என்பவர் மிரட்டப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.