சென்னை: பட தயாரிப்புக்காக பெற்ற 3 கோடியே 6 லட்சம் ரூபாயை 18 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்க நடிகர் விமலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விமல், தனது ஏ 3 வி பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்த ‘மன்னர் வகையறா’ படத்துக்காக கோபி என்ற பைனான்சியரிடம் 5 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதில் 3 கோடியே 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பிச் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்த போதும், பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.
இதையடுத்து, 3 கோடியே 6 லட்சம் ரூபாயை 18 சதவீத வட்டியுடன் திருப்பிச் செலுத்த நடிகர் விமலுக்கு உத்தரவிட வேண்டும் என பைனான்சியர் கோபி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்ட விமல் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகாததால், கடன் தொகையை 18 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்க நடிகர் விமலுக்கு நீதிபதி வேல் முருகன் உத்தரவிட்டுள்ளார்.