கோவை: சட்டவிரோத நாட்டு துப்பாக்கிகளை செப்டம்பர் 30க்குள் ஒப்படைக்க வேண்டும் என கோவை வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சட்ட விரோதம், அடையாளம் தெரியாத நாட்டு துப்பாக்கிகள் வைத்திருப்போர் அதனை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவை வன பகுதிகளில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.